×
Saravana Stores

அருணாச்சலா இன்ஜி. கல்லூரியில் புதுமை கண்காட்சி

நாகர்கோவில், பிப்.27: வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரியில் மாணவிகளின் புதிய கண்டுபிடிப்புகள் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சி கல்லூரியின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான கூட்டமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு துறை சார்பில் நடைபெற்றது. இதில் மாணவிகள் 80க்கும் மேற்பட்ட தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். கல்லூரி முதல்வர் ஜோசப் ஜவகர் தலைமையுரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக மார் எப்ரேம் பொறியியல் கல்லூரியின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான தலைமை இயக்குனர் முனைவர் லியே பிரைட் சிங் கலந்து கொண்டு எவ்வாறு புதிய கண்டுபிடிப்புகளை புதிய தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்க வேண்டும் என பேசினார். காது கேளாதவர்களுக்கு எளிதில் கல்வி கற்பிக்கும் கருவி,கண் தெரியாதவர்களுக்கு வழிகாட்டும் ஊன்றுகோல், பேரழிவுகளை முன்கூட்டியே கணிக்கும் கருவி, கண் கருவிழியை படமெடுத்து நீரிழிவு நோயை கண்டுபிடிக்கும் கருவி போன்ற மாதிரிகள் இக்கண்காட்சியில் சிறப்பு பெற்றது.

The post அருணாச்சலா இன்ஜி. கல்லூரியில் புதுமை கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Arunachal Eng. Innovation Exhibition in ,Nagercoil ,Arunachala Women's College of Engineering ,Manavilai ,Vellichandhi ,Consortium for Innovation ,Department of Artificial Intelligence ,Arunachal Eng. Innovation Exhibition in College ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் மாநகராட்சியில் பழைய பொருட்கள் ஏலம் தள்ளிவைப்பு