×
Saravana Stores

அரியலூரில் ஆசிரியர்கள் பணியிடை பயிற்சி முகாம் நிறைவு

 

அரியலூர், ஜன.14: அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தாவரவியல் துறை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம், சார்பில் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் அறிவியல் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் நடைபெற்ற பணியிடைப் பயிற்சி முகாம் நிறைவு பெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட அறிவியல் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

நிகழ்ச்சியில் அக்கல்லூரி முதல்வர் டோமினிக் அமல்ராஜ், மாவட்ட கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் ஆகியோர் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றி பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களின் பின்னூட்ட கலந்துரையாடல் நடைபெற்றது. முடிவில், தாவரவியல் துறை இணைப் பேராசிரியர் ஜெயக்குமார் நன்றி தெரிவித்தார்.

The post அரியலூரில் ஆசிரியர்கள் பணியிடை பயிற்சி முகாம் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Department of Botany, Tamil Nadu Science and Technology Forum ,Ariyalur Government College of Arts and Science ,
× RELATED அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர...