×

அரசு பஸ் கண்ணாடி மீது கல் வீச்சு

 

கோவை, ஜூன் 19: கோவை ஒண்டிப்புதூரில் இருந்து சின்னவேடம்பட்டி செல்லும் அரசு பஸ் பயணிகளுடன் அத்திப்பாளையம் பிரிவு அருகே நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டு இருந்தது. அப்போது பஸ்சின் பின் பக்க கண்ணாடி திடீரென உடையும் சத்தத்தை கேட்டு பயணிகள் பஸ் கண்டக்டரிடம் தெரிவித்தனர்.
அவர் வந்து பார்த்தபோது கண்ணாடி உடைந்து சிறிய ஜல்லி கற்கள் பஸ்சிற்குள் இருந்தது. இது குறித்து கண்டக்டர் சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அரசு பஸ் மீது கற்களை வீசிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரசு பஸ் கண்ணாடி மீது கல் வீச்சு appeared first on Dinakaran.

Tags : Stones ,Coimbatore ,Chinnavedampatti ,Ondipudur ,Athipalayam ,Dinakaran ,
× RELATED 25 ஆண்டுகளுக்கு கழித்து ரீ – ரிலீஸ்...