×

அரசுப்பள்ளியில் கண்காணிப்பு கேமராக்களுக்கு கூண்டு அமைத்து பாதுகாப்பு

திருப்பூர், மே 19: திருப்பூர் காதர்பேட்டை பகுதியில் நஞ்சப்பா நகரவை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6 முதல் 12ம் வகுப்பு வரை சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அறிவுசார் நூலகம் மற்றும் கலையரங்கமும் உள்ளது. அதேபோல் இப்பள்ளி மைதானத்தில் காலை மற்றும் மாலை வேலைகளில் நூற்றுக்கணக்கானோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப்போட்டிகளுக்காக பயிற்சி பெறுபவர்கள் நஞ்சப்பா பள்ளி மைதானத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்லக்கூடிய பள்ளி வளாகத்தை சுற்றிலும் தன்னார்வலர்கள் உதவியுடன் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கண்காணிப்பு கேமராக்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்திடும் வகையில் இரும்பு கம்பிகள் அமைப்புடன் கூண்டு அமைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பள்ளி வளாகத்தில் உடமைகள் மற்றும் வந்து செல்பவர்களின் பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The post அரசுப்பள்ளியில் கண்காணிப்பு கேமராக்களுக்கு கூண்டு அமைத்து பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Nanjappa Nagar Government Boys' Higher Secondary School ,Katharpettai ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...