×

அதிமுக சார்பில் துண்டு பிரசுரம்

 

பள்ளிப்பட்டு, மே 27: அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிப்பட்டு பேரூர் செயலாளர் ஜெயவேலு தலைமையில் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான திருத்தணி கோ.அரி கலந்துகொண்டு கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, பொதுமக்களுக்கு விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கினார். நிகழ்ச்சியில், பள்ளிப்பட்டு ஒன்றியச் செயலாளர் டிடி சீனிவாசன், முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் கண்ணையா, ஒன்றிய துணைச் செயலாளர் ஜானகிராமன், திருத்தணி ஒன்றிய இளைஞரணி செயலாளர் வேலஞ்சேரி பழனி, மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் பெருமாள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

The post அதிமுக சார்பில் துண்டு பிரசுரம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Pallipattu ,Perur ,Jayavelu ,AIADMK government ,AIADMK Organization ,Thiruthani… ,Dinakaran ,
× RELATED மாவட்டம் முழுவதும் மழையால் சேதமான சாலைகள் சீரமைப்பு