×

அச்சிறுப்பாக்கம் அருகே பயங்கரம் லாரி மீது அரசு பஸ் மோதி 2 பெண்கள் உள்பட 6 பேர் பலி: டிரைவர் தலைமறைவு

சென்னை: அச்சிறுபாக்கம் அருகே காலை 8 மணியளவில் ரயில்வே மேம்பாலத்தில் வந்த பஸ் கட்டுப்பாடு இழந்து லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில், கம்பிகளை ஏற்றிக் கொண்டு சென்ற மிக நீளமான லாரியின் பக்கவாட்டில் உரசி சென்றதில், அங்கு உட்கார்ந்து பயணம் செய்த 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். இதில், 2 பெண்கள் என்பது வேதனையான விஷயம். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து விழுப்புரம் பணிமனையை சேர்ந்த பஸ் ஒன்று நேற்று காலை 6 மணியளவில்  சிதம்பரத்துக்கு பஸ் புறப்பட்டது. இதில், 40க்கும் மேற்பட்ட ஆண், பெண் பயணிகள் இருந்தனர். பஸ்சை டிரைவர் முரளி (48) என்பவர் ஓட்டினார். பஸ்சின் முன் பகுதியில் டிரைவருக்கு நேராக இருக்கும் இருக்கையில் கண்டக்டர் தனவேல் (45) அமர்ந்திருந்தார். அச்சிறுப்பாக்கம் அடுத்த தொழுப்பேடு நோக்கி பஸ் வந்து கொண்டிருந்தது. காலை நேரம் என்பதால் பயணிகளில் சிலர் இருக்கையில் தூங்கி கொண்டிருந்தனர்.  இதனை தொடர்ந்து, மதுராந்தகம் அடுத்த தொழுபேடு ரயில்வே மேம்பாலத்தின் இறக்கத்தில் பஸ் வேகமாக சென்று கொண்டிருந்தது. பஸ்சுக்கு முன்பாக திண்டிவனம் நோக்கி மிக நீளமான கனரக லாரி ஒன்று இரும்பு கம்பிகளுடன் மெதுவாக சென்று கொண்டிருந்து. பாலத்தில் இருந்து இறங்கிய வேகத்தில் பஸ்சின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் டிரைவர் முரளி திணறினார். எனவே, லாரியின் வலது பக்கம் ஓவர் டேக் செய்து ெசன்றுவிடலாம் என்று நினைத்து பஸ்சை திருப்பினார். ஆனால், அதற்குள் பஸ் லாரியின் வலது பக்கத்தில் உரசியவாறு சென்றது. இதனால் பஸ்சின் இடதுபக்கம் முழுமையாக மோதியதுடன் நிற்காமல் சென்றது. இதனால் பஸ்சின் இடது பக்கம் இருக்கைவரை கிழித்து கொண்டு பஸ் சென்றது. இதனால் பஸ்சின் வலது பக்கம் இருந்தவர்களை லாரியின் பக்கவாட்டில் இருந்த இரும்பு கம்பிகள் குத்தி கிழித்தது. மேலும் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக நொறுங்கியது. பஸ் மோதிய வேகத்தில் எழுந்த சத்தம் கேட்டு பஸ்சில் இருந்தவர்களும் அந்த வழியாக சென்றவர்களும் அலறினர். இந்த சத்தம்கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் விரைந்து வந்து பஸ்சில் சிக்கியவர்களை மீட்க தொடங்கினர். அதற்குள் தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு துறையினர், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விபத்து நடந்த இடத்துக்கு வந்தனர். பின்னர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்து கிடந்தனர்.  இதில், 10 பேர் படுகாயமடைந்திருந்தனர். இதில் பொதுமக்களின் உதவியுடன் படுகாயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த 10 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இறந்தவர்கள் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒரு பெண் குழந்தை மற்றும் முதியவர் மிகவும் கவலை கிடமாக உள்ளார். இந்த கோர விபத்தில், இந்த கோர விபத்தில் திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் நேதாஜி நகரை சேர்ந்தவர்  வெங்டேஷன் (38), சென்னை சைதாப்பேட்ைடயை சேர்ந்த குரோசா (48), பண்ருட்டியை சேர்ந்த சவுந்தர்யா (28), மதுராந்தகம் அடுத்த கத்திரிசேரியை சேர்ந்த ஏகாம்பரம் (52) மற்றும் மணிகண்டன் (28) என தெரிய வந்துள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், இந்த விபத்தில்  டிரைவர் மட்டும் தப்பித்து  தலைமறைவாகி உள்ளார். எனினும், கண்டக்டர் தனவேலுவுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே,  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு  அதன் உதவியுடன் விபத்தில் சிக்கி, நொறுங்கிய அரசு பஸ் அப்புறப்படுத்தினர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து நெரிசல் சீரானது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது….

The post அச்சிறுப்பாக்கம் அருகே பயங்கரம் லாரி மீது அரசு பஸ் மோதி 2 பெண்கள் உள்பட 6 பேர் பலி: டிரைவர் தலைமறைவு appeared first on Dinakaran.

Tags : Achirupakkam ,Chennai ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...