×

அங்காளம்மன் பெரியாண்டிச்சி கோயில் திருவிழா

 

அந்தியூர், ஜூன் 26: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள சிங்கார வீதியில் அங்காளம்மன் கோயில் உள்ளது.இக்கோயில் திருவிழா நேற்று முன்தினம் நள்ளிரவில் நடந்தது. பஸ் நிலையம் அருகில் பெரியாண்டிச்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அமைக்கப்பட்டு, மாயான பதி பூஜை செய்து பக்தர்கள் வணங்கினர்.
முன்னதாக பெரியாண்டிச்சி அம்மனுக்கு பூஜை கூடையுடன், பம்பை, உடுக்கை, தாரை, தப்பட்டை, மேள தாள வாத்தியங்கள் முழங்க நள்ளிரவில் ஊர்வலமாக சென்றனர். அதனைத் தொடர்ந்து நேற்று முன்தின நள்ளிரவு விடிய விடிய சிறப்பு பூஜைகள் செய்து பெரியாண்டிச்சி அம்மனை பக்தர்கள் வழிபட்டனர்.

The post அங்காளம்மன் பெரியாண்டிச்சி கோயில் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Angalamman Periyandicchi Temple Festival ,Antyur ,Angalamman Temple ,Singara Street ,Erode district, ,Ikoil festival ,Periyandicchi Amman ,
× RELATED விதை உற்பத்தி திட்டம் குறித்து...