- அங்கன்வாடி
- STBI
- யூனியன் அரசு
- கோயம்புத்தூர்
- கோவை,
- குனியமுத்தூர்
- தொண்டாமுத்தூர்
- ஜனாதிபதி
- நாசர்
- பொதுச்செயலர்
- தின மலர்
கோவை, மே 3: கோவை குனியமுத்தூரில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வக்பு திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் தொண்டாமுத்தூர் தொகுதி தலைவர் நாசர் தலைமை வகித்தார். தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் ரவூப் நிஸ்தார், வர்த்தக அணி மண்டல தலைவர் அப்துல் கரீம், பொதுச்செயலாளர் இப்ராகிம் பாதுஷா, செயலாளர் அபுத்தாஹிர், செய்தி தொடர்பாளர் மன்சூர் அலி, செயற்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் கையில் கருப்பு கொடி மற்றும் கருப்பு பலூன் ஏந்தியும் கருப்பு உடை அணிந்தும் ஈடுபட்டனர். ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். வக்பு திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
The post அங்கன்வாடி மையம் கட்டும் பணி துவக்கம்: ஒன்றிய அரசை கண்டித்து எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
