- அங்கன்வாடி மையம்
- மாதர் சங்க மனு
- ஆண்டிப்பட்டி
- அங்கன்வாடி
- மையம்
- Kodangipatti
- போடி
- ஜனநாயக
- மாதர் சங்க மனு
- தின மலர்
ஆண்டிபட்டி, செப்.5: போடி அருகே கோடாங்கிப்பட்டி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை புனரமைப்பு பணிகள் செய்ய வேண்டும் என்று ஜனநாயக மாதர் சங்கத்தினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க செயலாளர் ஜோதிமணி தலைமையிலான பொதுமக்கள் நேற்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில், போடி தாலுகா கோடாங்கிப்பட்டி கிராமத்தில் சிஎஸ்ஐ ஆரம்பப்பள்ளி அருகே உள்ள அங்கன்வாடியில் சுமார் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் வருகை உள்ளனர்.
ஆனால் அந்த அங்கன்வாடியில் சுமார் நான்கு ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதி இல்லாமலும், விளையாட்டு உபகரணங்கள் இல்லாமலும் இயங்கி வருகின்றனர். இது குறித்து ஊராட்சி மன்ற மகாசபை கூட்டத்தில் தெரிவித்தும் அங்கன்வாடி மையம் புனரமைக்கப்படவில்லை. எனவே இருபதுக்கும் மேற்பட்டோர் வருகை தரக்கூடிய அங்கன்வாடி மையத்தில் அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். சத்துணவு கட்டிடத்தை புனரமைத்து பல வருடங்களாக தகரம் போட்ட குறுகிய அறையில் சிரமப்பட்டு இருக்கும் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
The post அங்கன்வாடி மையத்திற்கு அடிப்படை வசதிகள் வேண்டும்: மாதர் சங்கம் மனு appeared first on Dinakaran.