×

சினி மினி நியூஸ்

* ‘கட்டா குஸ்தி 2’ படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி 50 நாட்கள் நடித்தார். கடைசி நாள் படப்பிடிப்பில் என்னிடம் வந்து ‘இப்போதுதான் எனது கேரக்டர் பற்றி எனக்கு முழுவதுமாக புரிகிறது’ என்று ஐஸ்வர்யா லட்சுமி சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இத்தனை நாட்கள் புரியாமல் குத்துமதிப்பாக தான் நடித்தீர்களா என்று அவரிடம் கேட்டேன்’ என அப்படத்தின் இயக்குனர் செல்லா அய்யாவு கலகலப்பாக பேசியுள்ளார்.

* ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ படம் கடந்த 6 மாத காலமாக சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் இருந்த நிலையில் தற்போது ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. வரும் 17, அல்லது 31ம் தேதி படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* கணேஷ் கே.பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘கராத்தே பாபு’ என்ற அரசியல் படத்தில் இயக்குனர் பி.வாசுவின் மகனும், நடிகருமான சக்தி வில்லனாக நடித்துள்ளார். முன்னதாக ‘அனலி: அத்தியாம் 1’ என்ற மலையாள படத்தில் வில்லனாக நடித்திருந்த சக்தி, உடல் பருமன் காரணமாக, சோஷியல் மீடியாவில் மிகுந்த கேலிக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

* மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள மாளவிகா மோகனன் பிகினி உடையில் எடுத்த போட்டோவை அவரது சோஷியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

* ‘டிரைன்’, ‘ஸ்லம்டாக்: 33 டெம்பிள் ரோடு’, ‘அரசன்’, ‘பாக்கெட் நாவல்’ மற்றும் மணிரத்னம் படம் என பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி அடுத்ததாக கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் ‘டெலுலு’ ரியா ஷிபு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். அடுத்த வாரம் சென்னையில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

* மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் 5ம் தேதி முதல் தொடங்குகிறது. 20 நாட்கள் முதற்கட்ட படப்பிடிப்பு நடக்கிறது. 50 முதல் 60 நாட்களில் மொத்த படத்தையும் முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கும் இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.20 கோடிக்கு கைப்பற்றியுள்ளது.

* ‘நான் வளர்க்கும் ‘டெட்டி’ என்ற ‘பூடில்’ வகையை சேர்ந்த நாய் ஈன்ற பெண் குட்டியை தான் தற்போது திரிஷா ‘இஸ்ஸி’ என்ற செல்லப்பெயரில் வளர்த்து வருகிறார்’. இந்த சுவாரஸ்ய தகவலை விஷ்ணு விஷால் பகிர்ந்துள்ளார்.

Tags : Ciny ,News ,Aishwarya Lakshmi ,Cella Ayyau ,H. Vijay ,Bobby Deol ,Pooja Hekte ,Mamita Baiju ,Vinod ,
× RELATED இருமுனை விமர்சனம்