×

அனந்தன் காடு விமர்சனம்…

கடந்த 1989ல் இலங்கை ராணுவத்தினரின் தாக்குதலால் குடும்பத்தினரை இழந்த ஆர்யா, கேரள மற்றும் தமிழக எல்லையிலுள்ள காட்டில் தலைமறைவாக வசிக்கிறார். கேரள முதல்வருக்காக ரகசியமாக இயங்கி வரும் இந்திரன்ஸ் குழுவினரின் கூலிப்படையுடன் இணைகிறார். அப்போது கூலிப்படைக்கு ஒரு அசைன்மெண்ட் தரப்படுகிறது. அதை ஆர்யா முன்னின்று நடத்தும்போது என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

துடிப்பான, வீரமான, ஆக்ரோஷமான ஆர்யா ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார். நயவஞ்சக போலீஸ் சுனில், சைக்கோ நடிப்பால் பதற வைக்கிறார். முக்கிய வேடங்களில் இந்திரன்ஸ், ரெஜினா, அச்யுத் குமார், முரளி கோபி, தேவ் மோகன், போஸ் வெங்கட், நிகிலா விமல், சித்திக், அஜய், ரெஞ்சி பணிக்கர், அஞ்சலி பி.நாயர் சிறப்பாக நடித்துள்ளனர்.

உண்மைச் சம்பவங்களை தழுவி முரளி கோபி கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். படத்தின் உருவாக்கம் பிரமிக்க வைக்கிறது. அதற்காக இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமாரை பாராட்டினாலும், லாஜிக் மீறல்கள் நிறைய இருப்பதால் நம்பகத்தன்மை ஏற்படவில்லை. பி.அஜனீஷ் லோக்நாத் பின்னணி இசை கூடுதல். எஸ்.யுவா ஒளிப்பதிவு, ரோஹித் வி.எஸ்.வாரியத் எடிட்டிங், ஆர்.சக்தி சரவணன் ஸ்டண்ட் வடிவமைப்பு உள்பட டெக்னிக்கல் குழுவினரின் உழைப்பு அபாரம்.

Tags : Arya ,Lankan army ,Kerala ,Tamil Nadu ,Indrans ,Chief Minister ,Rudra ,Sunil ,
× RELATED விஜய்யுடன் மோத தயாராகும் கார்த்தி