- குமரகுரு கல்லூரி
- கோயம்புத்தூர்
- குமரகுரு கல்வி நிறுவனங்கள்
- இங்கிலாந்து
- மொனாக்கோ
- நெதர்லாந்து
- இங்கிலாந்து...
கோவை, ஜூலை 14: இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை குறித்த போட்டிகளில்,குமரகுரு கல்வி நிறுவனங்களை சேர்ந்த மூன்று மாணவர் குழுக்கள் சர்வதேச அளவில் உயரிய விருதுகளை வென்றுள்ளனர். அதன்படி, இங்கிலாந்தில் நடைபெற்ற ஐரோப்பிய சர்வதேச நீர்மூழ்கிக் கப்பல் பந்தயத்தில், ‘ஐமேரெஸ்ட்’ நிலைத்தன்மை விருதை வென்ற முதல் இந்திய குழு என்ற வரலாற்று சாதனையை குமரகுருவின் ‘டீம் இன்கிராப்ட்’ படைத்துள்ளது.
மேலும், மொனாக்கோவில் நடைபெற்ற எனர்ஜி போட் சேலஞ்சில், குமரகுருவின் ‘டீம் சீ சக்தி’ அணி ‘பிரின்ஸ் ஆல்பர்ட் 2 ஆப் மொனாக்கோ பவுண்டேஷன் நிலைத்தன்மை விருதை’ வென்றது.
இந்த சர்வதேச போட்டியில், அதிநவீன எலக்ட்ரிக் ரேசிங் கேட்டமரன் படகான ‘யாளி 5.0’-ஐ இந்த அணி காட்சிப்படுத்தியது.நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச சிறிய காற்றாலை போட்டியில், நிலைத்தன்மைக்கான விருதில் குமரகுருவின் ‘டீம் சுழல்’ அணி 2ம் இடத்தை பிடித்துள்ளது.
