- பெண்கள் டி20 உலகக் கோப்பை அரை இறுதி
- இங்கிலாந்து
- தென் ஆப்பிரிக்கா
- லண்டன்
- தெற்கு
- ஓவல் மைதானம்
- 10th
- ஐசிசி பெண்கள் டி 20 உலக கோப்பை
லண்டன்: 10வது ஐசிசி மகளிர் டி.20 உலக கோப்பையில் தி ஓவல் மைதானத்தில் நேற்றிரவு நடந்த 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து-தென்ஆப்ரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன் அடித்தது. கேப்டன் நாட் சிவர்-ப்ரண்ட் அதிகபட்சமாக 47 பந்தில் 75, ஹெதர் நைட் 58 ரன் அடித்தனர்.
பின்னர் களம் இறங்கிய தென்ஆப்ரிக்கா அணியில் தாஸ்மின் பிரிட்ஸ் 51 ரன் எடுக்க மற்ற அனைவரும் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர். 20ஓவரில் தென்ஆப்ரிக்கா 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களே எடுத்தது. இதனால் 40 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது. 5வது முறையாக, 8 ஆண்டுகளுக்கு பின் பைனலுக்குள் நுழைந்துள்ளது. நாளை மறுநாள் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் பைனலில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
