×

அரங்குக்குள் அனுமதிக்க மறுப்பதாக புகார்: இரண்டரை மணி நேரமாக அதிமுகவினர் காத்திருப்பு

 

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் இணைப்பு விழா அரங்குக்குள் தங்களை அனுமதிக்க மறுப்பதாக அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். அதிமுகவில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் 4 முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் தவெகவில் இணைகின்றனர். இதற்கான இணைப்பு விழா மாமல்லபுரத்தில் 9.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் முன்னாள் அமைச்சர்கள் மேடையில் காத்திருக்கின்றனர். தவெகவில் இணைய வந்த அதிமுக நிர்வாகிகலும் நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர்

இதனிடையே மாமல்லபுரத்தில் இணைப்பு விழா அரங்குக்குள் தங்களை அனுமதிக்க மறுப்பதாக மேலும் சில அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். அதிமுகவில் இருந்தபோது கூட இப்படி நடந்தது இல்லை என தெரிவித்துள்ளனர். ஒன்றரை மணி நேரமா போராடுறேன்.. உள்ள விட மாட்டேங்குறாங்க என விஜயபாஸ்கர் ஆதரவாளர் தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் இணைப்பு விழா அரங்குக்கு வெளியே இரண்டரை மணி நேரமாக காத்திருக்கின்றனர். அரங்கில் அமர்ந்திருந்தவர்கள் வெளியே சென்ற நிலையில் மீண்டும் உள்ளே அனுமதிக்க மறுப்பதாக கூறப்படுகிறது.

Tags : Mamallapuram ,minister ,C. Vijayabaskar ,M. R. Vijayabaskar ,Davega ,
× RELATED 27 கோயில்களில் பரம்பரை முறைவழிசாரா...