- ஆளுநர் ஊராட்சி ரிட் எஸ் பாரதி
- சென்னை
- கவர்னர்
- ரூ
- அமைச்சர்
- விஜய் எஸ் பாரதி
- விகோவிற்கு
- முதல் அமைச்சர்
- விஜய்
- திமுகா
சென்னை: முதலமைச்சர் விஜய் மீது போலீஸ் வழக்கு பதிய அனுமதி கோரி ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதியுள்ளார். அதில்; முதலமைச்சர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டதை வைகோ பொதுவெளியில் ஒப்புக்கொண்டுள்ளார். திமுக எம்எல்ஏக்களை பதவி விலக வைக்க முதல்வர் விஜய், வைகோ கூட்டுச்சதி. விஜய் – வைகோ இணைந்து கூட்டுச் சதி செய்ததை அவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். அரசு பதவியை முதலமைச்சர் தவறாக பயன்படுத்தியுள்ளார்.
2 எம்.எல்.ஏ.க்களை பதவி விலகச் செய்ய வைகோவுடன் இணைந்து முதலமைச்சர் விஜய் கூட்டுச் சதி; கடையநல்லூர், சீர்காழி தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டவர்கள். விஜயின் செயல் ஜனநாயகத்துக்கு குந்தகம் விளைவிக்கும் செயல். மதிமுகவைச் சேர்ந்த ராஜேந்திரன், செந்தில் செல்வன் அக்கட்சியில் இருந்து விலகி போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 2 எம்.எல்.ஏ.க்களை பதவி விலகச் செய்ய முதலமைச்சர் விஜயே நேரடி குதிரை பேரம் செய்துள்ளார்.
திமுக எம்எல்ஏக்கள் ராஜேந்திரன், செந்தில் செல்வன் இருவரையும் ராஜினாமா செய்ய வைக்க முயற்சி செய்து வருகின்றனர். பிற கட்சி எம்எல்ஏக்களை ராஜினாமா செய்து தவெகவில் சேருமாறு அக்கட்சி வற்புறுத்துவதாக புகார் தெரிவித்துள்ளார்.
