×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,04,240க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,04,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலக நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற சர்வதேச காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. தென்னிந்தியாவிலேயே அதிக அளவில் தங்கம் வைத்திருக்கும் மாநிலமாக தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.

கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, சர்வதேச பொருளாதாரச் சூழலால் தற்போது மீண்டும் கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, தங்கம் விலை தொடர்ந்து 2 நாட்களில் பவுனுக்கு ரூ.1,840 உயர்ந்துள்ளது. வாரத்தின் இறுதி நாளான (சனிக்கிழமை) தங்கம் விலை உயர்ந்தது. சனிக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,370க்கும், பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 6,960க்கும் விற்பனையானது. அதே நேரத்தில் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று (திங்கட்கிழமை) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,06,400க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.13,300க்கு விற்பனையானது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.245க்கும், கிலோ ரூ.2,40,000க்கும் விற்பனையானது.

இதனையடுத்து இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,04,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ஒரு கிராம் ரூ.13,030க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்தது ஒரு கிராம் ரூ.240க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai ,
× RELATED சென்னையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 6 மாணவர்கள் கைது: போலீசார் நடவடிக்கை