×

தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குநர் தற்கொலை முயற்சி

புதுச்சேரி: தூக்க மாத்திரைகளை அதிகளவில் சாப்பிட்டு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறையின்கீழ் செயல்படும் எய்ஸ்ட் கட்டுப்பாட்டு துறையில் துணை இயக்குநராக பணிபுரிபவர் டாக்டர் அருள்விசான் (53). இவர், புதுச்சேரி சுதந்திர பொன்விழா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகளை திட்ட இயக்குனர் அருள்விசான் சீர்குலைப்பதாக கூறி, சமூக அமைப்பினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் இத்துறையில் சில முறைகேடு புகார்களும் எழுந்தன.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு வீட்டில் இருந்தபோது அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை டாக்டர் அருள்விசான் தின்றதாக கூறப்படுகிறது. இதனால் மயக்கமடைந்த அவரை குடும்பத்தினர் உடனே மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துமவனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகலவறிந்த பெரியகடை போலீசார் சம்பவம் குறித்து உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மன உளைச்சல் காரணமாக அவர் தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இச்சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : AIDS ,Puducherry ,Dr. ,Arulvisan ,AIDS Control Department ,Health Department of the Puducherry Government ,Puducherry… ,
× RELATED சென்னையில் நண்பர்களால் சிறுமி பாலியல் வன்கொடுமை: போலீசார் தீவிர விசாரணை