- கீர்த்தனா
- அமைச்சர்
- ஜெகடிஸ்வரி
- விருதுநகர்
- ஜகதீஸ்வரி
- சிலம்ப
- வீரனா
- வீரகாந்தாஸ்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
விருதுநகர்: அரசு விழாவில் தனது பெயரை ஏன் முதலில் போடவில்லை என ஆட்சியரிடம் அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகரில் சிலம்ப வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் விழா இன்று காலையில் தொடங்கியது. விழாவுக்கான பேனரில், தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்கத் துறை அமைச்சர் கீர்த்தனா பெயர் முதலில் இருந்தது. அதனைத் தொடர்ந்து விளையாட்டுத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பெயர் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி தனது பெயரை முதலில் போடாமல் அமைச்சர் கீர்த்தனாவின் பெயரை முதலில் போட்டதற்கு ஜெகதீஸ்வரி எதிர்ப்பு தெரிவித்தார். விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் கீர்த்தனாவின் பெயரை முதலில் போட்டது ஏன்? துறை மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற ரீதியில் எனது பெயரே முதலில் வர வேண்டும். அரசு நிகழ்ச்சி நடந்த மேடையிலேயே விருதுநகர் ஆட்சியரிடம் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
“ப்ரோட்டாகால் தெரியாதா? பல முறை சொல்லியாச்சு?” என அதிகாரிகளை கடிந்த அவரை, “இனி இப்படி நடக்காது” என ஆட்சியர் சமாதானப்படுத்தினார். விருதுநகர் ஆட்சியரை எச்சரிக்கும் தொனியில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
