×

காவல் அதிகாரிகள் 15 பேர் பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

 

சென்னை: காவல் அதிகாரிகள் 15 பேர் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆர்.உதயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் தெற்கு சரக துணை ஆணையர் ஆகாஷ் ஜோஷி, நெல்லை மேற்கு துணை ஆணையராக அன்ஷுல் நாகர் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக ரமேஷ் பாபு நியமனம் செயப்பபட்டுள்ளார். அடையாறு துணை ஆணையராக ஏ.சி.கார்த்திகேயன், கோயம்பேடு துணை ஆணையராக குணால் உத்தம் ஷ்ரோட் நியமிக்கப்பட்டுள்ளார்.

தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாகர பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையராக கீதாஞ்சலி நியமனம் செயப்பபட்டுள்ளார். திருப்பூர் நகர வடக்கு துணை ஆணையராக ரமேஷ் கிருஷ்ணன் நியமனம், ஆவடி காவல் ஆணையரக செங்குன்றம் துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி மகேஸ்வரி நியமனம், தாம்பரம் காவல் ஆணையரக தலைமையகம் மற்றும் நிர்வாகம் துணை ஆணையராக கண்ணன் நியமனம் செயப்பபட்டுள்ளார்.

காவல்துறை நவீனமயமாக்கல் உதவி ஐஜியாக ஐபிஎஸ் அதிகாரி வேல்முருகன் நியமனம், திருச்சி நகர வடக்கு துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி பனாவத் அரவிந்த் நியமனம், சென்னை சிபிசிஐடி வடக்கு மண்டல எஸ்.பி.யாக அர்புதா ராஜ்புத் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags : Tamil Nadu government ,Chennai ,Tiruvannamalai ,District ,Police Superintendent ,R. Udayakumar ,Tiruppur South Cargo ,Deputy Commissioner ,Aakash Joshi ,Rice West ,
× RELATED தூய்மைப் பணிகளை தனியாருக்கு...