கரூர், ஜூன் 24: நிலக்கடலையை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண்மைத்துறை சார்பில் தெரிவித்துள்ளதாவது:
கோடை காலத்தில் நிலத்தை உழவு செய்து கூட்டுப்புழுக்களை அழிக்கலாம். நிலத்தை களைகளின்றி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பயிர்ச் சுழற்சி முறையை கையாள வேண்டும். இளம் புழுக்களை கையால் சேகரித்து அழிக்கலாம். விளக்கு பொறியை 3க்கு4 வீதம் அமைத்து அந்துப்பூச்சியை கவர்ந்து அழிக்கலாம். விளக்கு பொறி வைத்திருக்கும் பகுதியில் முட்டைக குவியலை சேகரித்தும் அழிக்கலாம். வயலை சுற்றிம் 30 செமீ நீளம் மற்றும் 25 செமீ அகலம் இருக்கும் அளவிற்கு குழிகள் அமைத்து அதன் மூலம் புழுக்களை அழிக்கலாம்., அசாடிராக்டின் 600 மிலி ஒரு ஏக்கருக்கு தெளிக்கலாம்.
இந்த நோய்களை கட்டுப்படுத்தும் முறையை பொறுத்தவரை, இலைப்புள்ளி நோய்களை பூஞ்சானக் கொல்லிகளை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். உயிரியில் கட்டுப்பாட்டு காரணிகளுடன் விதை நேர்த்தி செய்தும் கட்டுப்படுத்தலாம்., முந்தைய பயிர்களின் கழிவுகளை ஆழமாக உழவு செய்து நோய் பரப்பும் காரணிகளை கட்டுப்படுத்தலாம்.
