×

மேகதாது அணை விவகாரம் -புரிஞ்சிக்கோங்க.! இதுக்காக தான் “புதிய நடுவர் மன்றம் தேவை”.. தங்கம் தென்னரசு விளக்கம்

சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்க திமுக கோரியதற்கான காரணங்கள் குறித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்து உள்ளார். அண்மையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேகதாது அணைக்கு எதிராக ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானம் மற்றும் புதிய நடுவர் மன்றக் கோரிக்கை தொடர்பாக அவர் பேசினார்.

இவ்விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தங்கம் தென்னரசு, மேகதாது அணை தொடர்பாக புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்தியிருக்கிறோம். காவிரியில் மேகதாது அணை என்பது புதிய பிரச்சனை. இதற்கு புதிய நடுவர் மன்றம் அமைப்பதே சிறந்த முடிவு. இதனால் காவிரி நீர் தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றம் இறுதி செய்திருக்கிற தீர்ப்புக்கு எந்த பாதிப்பும் வராது.

மேகதாது விவகாரத்தில் மீண்டும் ஒரு விவாதத்தை உருவாக்குவது தேவையற்றது. தமிழ்நாட்டின் வாழ்வாதார உரிமையைப் பாதுகாக்க மீண்டும் ஒரு வீண் விவாதத்தை உருவாக்காமல், இந்த விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரண்டு நின்று தமிழகத்தின் பலத்தை நாம் காட்ட வேண்டும் என்று குறிப்பிட்டார். இந்த கோரிக்கை தமிழ்நாடு மக்களின் நலனையும், காவிரி உரிமையையும் காக்கும் முடிவுதான் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

இது எதுவுமே திமுக-வின் முடிவு அல்ல, தமிழக அரசின் முடிவே – ஏனென்றால் மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதை தடுக்க புதிய நடுவர் மன்றம் தேவை என சட்ட வல்லுநர்கள் கூறுவதாக தங்கம் தென்னரசு விளக்கம் அளித்து உள்ளார். தொடர்ந்து பேசிய தங்கம் தென்னரசு மேகதாது அணை கட்டக்கூடாது என தமிழக சட்டசபையில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக தரப்பு நியாயங்களை ஒன்றியத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பிரதமர், அமைச்சர்களிடம் எடுத்து கூறி வருகிறோம். அதே நேரம் கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ் என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மேகதாது அணையை கட்டுவோம் என அடாவடியாக கூறி வருகின்றனர். கர்நாடக அரசின் செயல் தமிழக விவசாயிகளுக்கு பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இந்த விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைப்பதே சிறந்த மற்றும் ஆக்கப்பூர்வமான முடிவாக இருக்கும். இதனால் காவிரி நதிநீர் பங்கீட்டில் எந்த பிரச்சினையும் வராது. மீண்டும் சொல்கிறோம், மேகதாது அணை பிரச்சினையில் புதிய நடுவர் மன்றம் அமைப்பதே சிறந்தது என்று தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

இதனிடையே மேகதாது அணை விவகாரம் என்பது காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பிற்குப் பிறகு உருவான ஒரு புதிய சட்டச் சிக்கலாகும். எனவே, 1956-ஆம் ஆண்டின் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தாவா சட்டத்தின்படி (Inter-State River Water Disputes Act, 1956) இதற்குத் தனியாக ஒரு நடுவர் மன்றம் அமைப்பதே சிறந்த தீர்வு என தமிழக அரசு தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

Tags : Megathu Dam ,Chennai ,Former Minister ,Gold South Narasu ,Demuka ,Megadadu Dam ,Tamil Nadu Legislative Assembly ,
× RELATED மேகதாது விவகாரம் குறித்து கர்நாடக...