×

இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு: 45 தொழிலாளர்கள் பாதிப்பு!

 

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு காரணமாக 45க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மயக்கமடைந்துள்ளார். அம்மோனியா வாயுவை சுவாசித்த சில தொழிலாளர்களுக்கு வாய், மூக்கில் ரத்தம் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்மோனியா வாயு கசிவால் மயக்கமடைந்த 45 தொழிலாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags : Periyapaliam ,
× RELATED அமோனியா கசிவால் உயிரிழந்தோர்...