×

தமிழகத்தில் உள்ள 46 கோயில்களின் உபரி நிதியிலிருந்து திருமண மண்டபம் வணிக வளாகம் கட்டும் பணிகள் ரத்து: அரசாணை வெளியீடு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அரசாணை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுவதற்கு சட்டமன்ற அறிவிப்பின் மூலம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. தற்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்தாண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளில் கோயில் உபரி நிதியிலிருந்து திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டும் பணிகளுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படாத நிலையில் அவ்வறிவிப்புகளை சட்டமன்ற அறிவிப்பிலிருந்து நீக்கம் செய்வதற்கு, கோயில்களிடமிருந்து முன்மொழிவுகள் வரப்பெற்றது. எனவே, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும் கோயில் அறங்காவலர் குழு மற்றும் தக்கார் தீர்மானத்தின்படியும், இணை ஆணையர்களின் முன்மொழிவுகளை ஏற்றும் கோயில்களின் உபரிநிதியின் மூலம் திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டும் பணிகளை சட்டமன்ற அறிவிப்பிலிருந்து நீக்கம் செய்யுமாறு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அரசை கேட்டு கொண்டுள்ளார்.

அதை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், சென்னை அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் கோயில், சென்னை மேற்கு மாம்பலம் பாஷ்யகார ஆதிசென்ன கேசவப்பெருமாள் கோயில் உள்ளிட்ட 46 கோயில்களின் உபரிநிதியின் மூலம் திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டும் பணிகளை சட்டமன்ற அறிவிப்பிலிருந்து நீக்கம் செய்து செய்யப்படுகிறது.

Tags : Tamil Nadu ,Chennai ,Hindu Religious Institute ,Madurai ,Chennai High Court ,
× RELATED தஞ்சை அருகே கனமழையில் நனைந்து பாழான...