×

சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம், சீரழிக்கும் தவெகவினர் மறுபக்கம்! தவெக அரசு மீது திமுக ஐடி விங் கடும் விமர்சனம்!

 

சென்னை: தவெகவினர் ஒரே நாளில் செய்துள்ள ‘ஹாட்ரிக்’ கிரிமினல் சாதனையைப் பார்த்து மெச்சிப் போய் மௌனம் ஆகிட்டீங்களா CM சார்? என தவெக அரசு மீது திமுக ஐடி விங் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது; சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம், சீரழிக்கும் தவெக பொறுக்கிகள் மறுபக்கம்! ​உங்க கட்சிப் பொறுக்கிகள் ஒரே நாளில் செய்துள்ள இந்த ‘ஹாட்ரிக்’ கிரிமினல் சாதனையைப் பார்த்து மெச்சிப் போய் மௌனம் ஆகிட்டீங்களா CM சார்?

​நீங்கள் ஒரு மங்குனி முதல்வர் என்று நன்றாகத் தெரிந்துவிட்ட காரணத்தால் தான், உங்களையோ, உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையையோ பார்த்து இந்தப் பொறுக்கிகளுக்கு துளியும் பயமில்லை! மேடையில் தனிமனித ஒழுக்கம் பற்றி ஊருக்குப் பாடம் எடுத்த நீங்கள், முதலில் அதை உங்கள் கட்சியினருக்கு கற்றுக் கொடுத்தீர்களா?

​ஒருவேளை அவர்களைக் கண்டிக்கப் போய், “எங்க தலைவரையும், அவர் படங்களையும் பார்த்துத் தான் நாங்க இப்படி ஆனோம். முதலில் தனிமனித ஒழுக்கம் என்றால் என்னவென்று எங்கள் தலைவரைத் தெரிந்து கொள்ள சொல்லுங்கள்” என்று அந்தப் பொறுக்கிகள் உங்களை நோக்கியே கை நீட்டினால், என்ன செய்வீர்கள் CM சார்? இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Dima IT Wing ,Government of Deka ,Chennai ,hatrick ,Davekavina ,Dimuka ID Wing ,
× RELATED அசாமில் இந்திய விமானப்படைக்கு...