×

நடப்பாண்டு நீட் தேர்வு எழுத கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கீடு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

டெல்லி: ஜூன் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் மறுதேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மே 5ல் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், கேள்விகள் முன்கூட்டியே கசிந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். முக்கிய குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மறுதேர்வு வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது.

நீட் மறுதேர்வு எழுதும் மாணவர்கள் 3 மணி 15 நிமிடங்கள் வரை தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும். கேள்விகள் முன்கூட்டியே கசிந்ததால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் எந்த பிரச்னையும் ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. வினாத்தாள் தயாரிப்பு தொடர்பான பணிகளில் ஈடுபட்ட அனைவரும் ரகசியமான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேர்வை எந்த பிரச்னையும் இல்லாமல் நடத்த ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், நீட் தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த நடவடிக்கை நிர்வாக நடைமுறைகளால் தேர்வு எழுவதற்கான நேரம் பாதிக்கப்படுவதாக மாணவர்கள் கருதிய நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. வினாத்தாள் புத்தகத்தில் ‘தோராயக் கணக்கீடு (rough work) செய்வதற்கான இடவசதியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Tags : National Selection Agency ,Delhi ,
× RELATED அளவிற்கு மேல் நச்சுத் தன்மை வாய்ந்த...