×

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு; இன்று தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் ரத்து!

 

சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்று (11.06.2026) காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அனைத்து திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இயக்குனர் இமயம் பாரதிராஜா (84) உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அவரது வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலமானார். இயக்குநர் பாரதிராஜா மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.1941ம் ஆண்டு ஆகஸ்ட் 17ல் தேனியில் பிறந்தவர் பாரதிராஜா. இயக்குநர் பாரதிராஜாவின் இயற்பெயர் சின்னசாமி. சுகாதார ஆய்வாளராக தனது பணியை தொடங்கியவர் பாரதிராஜா. தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்தியவர் பாரதிராஜா.

இயக்குநர் பாரதிராஜாவின் முதல் படம் ’16 வயதினிலே’ முதல் படத்திலேயே சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசின் விருது பெற்றார். ஸ்டுடியோவுக்குள் இருந்த சினிமாவை கிராமத்துக்கு அழைத்து சென்றவர். ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் கதாநாயகனாக களமிறங்கினார் பாரதிராஜா. தாஷ்கண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் `முதல் மரியாதை` திரையிடப்பட்டது. 2004ல் பாரதிராஜாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது ஒன்றிய அரசு. இயக்கம், தயாரிப்பு, கதாசிரியர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர். பாசத்துக்குரிய உங்கள் பாரதிராஜா பேசுகிறேன் என ரசிகர்களை ஈர்த்தவர். ராதா, ராதிகா, ரேவதி உள்ளிட்ட நடிகைகளை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். மொத்தம் 44 படங்களை பாரதிராஜா இயக்கியுள்ளார்.

இந்நிலையில், இயக்குனர் இமயம் பாரதிராஜா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். முதலமைச்சர் உத்தரவை அடுத்து பாராதிராஜா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. இன்று இரவு 1 மணிக்கு இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல் தேனிக்கு கொண்டு செல்லப்படுகிறது. தேனி அருகேவுள்ள பண்ணை வீட்டில் பாரதிராஜாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இயக்குனர் இமயம் பாரதிராஜா உடல் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்றடைந்தது. சென்னை நீலாங்கரையில் இருந்து வாகனம் மூலம் பாரதிராஜா உடல் கொண்டு செல்லப்பட்டது. இயக்குநர் பாரதிராஜாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.

 

Tags : Imayam Bharathiraja ,Tamil Nadu ,Chennai ,Imayam Bharatiraja ,
× RELATED எல்லாவற்றுக்கும் முந்தைய ஆட்சியை...