×

மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட வழக்கில் விசாரணைக் குழு அமைப்பு

 

சென்னை: மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட வழக்கில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி எஸ்.பி. சாஜிதா தலைமையில் விசாரணைக் குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, நாளை காலை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி விசாரிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், புகார்தாரிடம் விசாரணை மேற்கொள்ளவும் விசாரணைக் குழு திட்டமிட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் டெண்டர், கொள்முதல் மற்றும் விசாரணை தொடர்பான முக்கிய தகவல்களை கொண்ட ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ளதாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டிருந்தது.

குறிப்பாக மேலாண்மை துறையின் கட்டுப்பாட்டில் இருந்த நிலக்கரி கொள்முதல் தொடர்பான தகவல்கள் அடங்கிய டிஸ்க்குகள் திருடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்வாரியத்தின் விஜிலென்ஸ் அதிகாரிகளிடமும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இது தொடர்பாக மின்வாரிய ஒப்பந்த ஊழியர் கோபிநாத், முரளிமனோகர் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் மின்வாரிய ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. சென்னை காவல்துறை டி.ஜி.பி.க்கு பரிந்துரை செய்யப்பட்டதன் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்தன.

இந்நிலையில் மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட வழக்கில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி எஸ்.பி. சாஜிதா தலைமையில் விசாரணைக் குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, நாளை காலை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி விசாரிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், புகார்தாரிடம் விசாரணை மேற்கொள்ளவும் விசாரணைக் குழு திட்டமிட்டுள்ளது.

Tags : Investigative Committee ,Electric Board ,Chennai ,Electricity Board ,CBCID ,Sajita ,F. I. R. ,
× RELATED மீண்டும் போர் தொடங்க கூடாது.!...