×

புதிய H1-B விசாக்களுக்கு டிரம்ப் நிர்வாகம் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் தடை

வாஷிங்டன்: புதிய H1-B விசாக்களுக்கு டிரம்ப் நிர்வாகம் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணத்திற்கு அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நாடாளுமன்ற ஒப்புதல் இன்றி விதிக்கப்பட்ட கட்டணம் சட்டவிரோதம் என நீதிபதி கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் டிரம்ப் நிர்வாகம் H1-B விசாக்களுக்கான கட்டண உயர்வை அறிவித்தது. இதை எதிர்த்து ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மாநில அரசு வழக்கறிஞர்கள் 20 பேர் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கு விசாரணையின் போது, இந்தக் கட்டண உயர்வால் திறமையான மருத்துவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களைப் பணியமர்த்துவது பாதிக்கப்படும் என்று வாதிட்டனர்.

போஸ்டனில் உள்ள மாவட்ட நீதிபதி லியோ சொரோகின், இந்த அதீத கட்டண உயர்வை “சட்டவிரோதமான வரி” என்று குறிப்பிட்டுள்ளார். வரிகளை நிர்ணயிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உண்டு என்றும், அதிபர் தனது அதிகார வரம்பை மீறி இந்தக் கட்டணத்தை விதித்துள்ளார் என்றும் அவர் தீர்ப்பளித்தார். தற்போது இந்தக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், புதிய H-1B விண்ணப்பங்களை பழைய கட்டணத்திலேயே தாக்கல் செய்ய முடியும்.

இந்த நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. H-1B விசா திட்டத்தில் இந்தியர்கள் அதிகளவில் (சுமார் 71%) பயனடைவதால், இந்தத் தீர்ப்பு இந்திய தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

Tags : US court ,Trump administration ,Washington ,US ,
× RELATED சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு...