டெல்லி: உலகிலேயே அதிக வெப்பத்தால் பாதிக்கப்பட கூடிய 50 நகரங்களின் பட்டியலில், மற்ற எந்த நாட்டை விடவும் இந்தியாவில் இருந்து அதிக நகரங்கள் இடம்பெற்று உள்ளன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உலகம் முழுவதிலுமுள்ள 205 நகரங்களை மையமாகக் கொண்டு நடத்திய இந்த ஆய்வில், இந்தியாவின் 14 நகரங்கள் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் நமக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக தமிழகத்தை சேர்ந்த 2 நகரங்களும் இந்த பட்டியலில் உள்ளன.
இந்தியாவிற்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ள நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் முறையே ஐந்து மற்றும் நான்கு நகரங்கள் இந்த பட்டியலில் உள்ளன. அதிக வெப்ப அபாயத்தை எதிர்கொள்ள கூடிய டாப் 50 நகரங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய நகரங்களின் விவரங்கள் கீழே..
1. நாக்பூர்
2. மதுரை
3. போபால்
4. கான்பூர்
5. புனே
6. பாட்னா
7. ஹைதராபாத்
8. பெங்களூரு
9. கொல்கத்தா
10. ஜெய்ப்பூர்
11. லக்னோ
12. சென்னை
13. மும்பை
14. அகமதாபாத்
மேலும் இந்த டாப் 50 பட்டியலில் அகமதாபாத் (குஜராத்) – உலகளவில் 2-வது இடம்; நாக்பூர் (மகாராஷ்டிரா) – உலகளவில் 4-வது இடம்; மதுரை (தமிழ்நாடு) – உலகளவில் 7-வது இடம் பெற்றுள்ளன. அதாவது 3 முக்கிய இந்திய நகரங்கள் உலகிலேயே அதிக வெப்பத்தால் பாதிக்கப்பட கூடிய டாப் 10 நகரங்களில் இடம்பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
