திருவண்ணாமலை: செங்கம் அருகே ஆரம்பப் பள்ளியில் சமையலறையில் கேஸ் சிலிண்டர் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் கேஸ் சிலிண்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சமையல் செய்ய அடுப்பை ஆன் செய்தபோது கேஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது. தீ விபத்தை அடுத்து பள்ளியில் மாணவர்கள் உடனே வெளியேற்றப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
