×

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவி வரும் அரசியல் மாற்றங்கள், எப்போதும் தங்கம் விலையில் எதிரொலிப்பது வழக்கம். அந்த வகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்படப் போவதாக வெளியாகியுள்ள தகவல்கள், உலகப் பொருளாதாரத்தை புதிய பாதையில் தள்ளியுள்ளது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

அதாவது நேற்று முன்தினம் தங்கத்தின் விலை மேலும் அதிரடியாக சரிவை சந்தித்தது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.14,500க்கும், பவுனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் விற்பனையானது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் நேற்று சரிவை சந்தித்தது. அதன்படி, வெள்ளி விலை கிராமிற்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.285க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து பார் வெள்ளி ரூ.2.85 லட்சத்துக்கும் விற்பனையானது.

இதனையடுத்து நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,16,800க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,600க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.290க்கு விற்பனையானது.

இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ. 14,630க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.290க்கு விற்பனையாகிறது.

Tags : Chennai ,United States ,Iran ,
× RELATED தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று...