×

“குதிரை பேரம், பணப்பறிமாற்றம்” – தவெக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறிய அதிமுக எம்.பி. தனபால்

 

சென்னை: தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக அதிமுக எம்.பி. தனபால் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது. ஆதாயத்துக்காகவே அதிமுகவில் சிலர் தவெகவுக்கு செல்கின்றனர். அதிமுக தலைமை சரியில்லை என்பதை ஏற்க முடியாது; ஆதாயத்துக்காகவே 4 எம்எல்ஏக்கள் சென்றுள்ளனர். ஆதரவு கேட்காமல் கட்சியை உடைப்பது என்ன நியாயம்?; தவெக அநாகரிக செயலில் ஈடுபடுகிறது.

42 அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி வசம் இருக்கின்றனர். தவெகவில் இருந்து விரைவில் பலர் கட்சித் தாவப் போகின்றனர். ராஜினாமா செய்த 4 அதிமுக எம்.எல்.ஏ.க்களின் பின்னணியை ஆராய வேண்டும். மிகப்பெரிய அளவில் பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக தகவல். ஒன்றிய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அமலாக்கத் துறையும் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

Tags : Reverend ,M. B. Tanabal ,Chennai ,Adimuka M. B. Tanapal ,
× RELATED பரந்தூரில் புதிய விமான நிலைய திட்டப்...