×

காரைக்குடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரத்த பரிசோதனை முடிவை மாற்றி கொடுத்ததால் பரபரப்பு

 

காரைக்குடி: காரைக்குடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரத்த பரிசோதனை முடிவை மாற்றி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காளியப்பன், காளீஸ்வரன் தம்பதியின் 14 வயது மகளுக்கு தொண்டையில் சதை வளர்ந்துள்ளது. சிகிச்சைக்காக சிறுமியின் ரத்த மாதிரி எடுத்து பரிசோதித்துள்ளனர். பரிசோதனை முடிவில் சிறுமியின் ரத்த மாதிரிக்கு பதில் வேறு ஒருவரின் ரத்த மாதிரி முடிவை அளித்துள்ளனர். சிறுமிக்கு மஞ்சள் காமாலை, கல்லீரலில் பாதிப்பு உள்ளதாக கூறி லேப் டெக்னீசியன் பரிசோதனை முடிவை தந்தார்.

மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். தனியார் மருத்துவமனையில் சிறுமியின் ரத்த மாதிரி எடுத்து பரிசோதித்தபோது நலமாக இருப்பது தெரிய வந்தது. தவறான பரிசோதனை முடிவை கொடுத்தது குறித்து மருத்துவமனையில் சிறுமியின் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags : Karaikudi ,District Government Hospital ,Kaliyappan ,Kalieswaran ,
× RELATED திருத்தணியில் விவசாயத்திற்கு என கூறி...