- Vilupuram
- சரத் குமார்
- பரங்கியூர்
- திருவெண்ணெய்நல்லூர்
- விழுப்புபுரம் மாவட்டம்
- சிவர்ணஜனி
- கர்நாடக
- பெங்களூரு
- சென்னை
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பேரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார் (34). இவரும், கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சிவரஞ்சனி (34) என்பவரும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் வேலை செய்து கொண்டிருந்த போது ஏற்பட்ட நட்பு காதலாக மாறி, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் சென்னையில் தங்கி வேலை செய்து வந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் இருவரும் சொந்த கிராமமான பேரங்கியூருக்கு வந்து தங்கியுள்ளனர்.
இந்நிலையில் சரத்குமாருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி பிரச்னை செய்து வந்ததாக தெரிகிறது. நேற்று மதியம் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரத்குமார் அருகில் கிடந்த அரை எச்.பி. மின் மோட்டாரை எடுத்து மனைவியின் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிவரஞ்சனி அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து இறந்தார்.
தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கணவர் சரத்குமாரை மடக்கி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
