நன்றி குங்குமம் டாக்டர்
கருஞ்சீரக எண்ணெய் (Black Seed Oil) அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்தது. இது தோல் நோய்கள், சுவாசப் பிரச்னைகள், முடி உதிர்தல் மற்றும் செரிமானக் கோளாறுகளைக் குணப்படுத்த உதவுகிறது. கூந்தல் வளர்ச்சியை தூண்டுவதிலும், முடி உதிர்வை கட்டுப்படுத்துவதிலும் கருஞ்சீரக எண்ணெய் (Black Seed Oil/Kalonji Oil) மிகச்சிறந்த இயற்கை தீர்வாக செயல்படுகிறது. இதில் உள்ள ‘தைமோகுயினன்’ (Thymoquinone) என்ற வேதிப்பொருள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உச்சந்தலையை ஆரோக்கியமாக்கி, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.
கருஞ்சீரக எண்ணெயின் நன்மைகள்:முடி உதிர்வை தடுத்தல்: முடி உதிர்தலை நிறுத்தி, புதிய முடிகள் வளர உதவுகிறது.வறட்சி மற்றும் பொடுகு: உச்சந்தலையில் உள்ள அரிப்பு, வறட்சி மற்றும் பொடுகு பிரச்சனைகளை சரிசெய்கிறது.வலுவான முடி: முடி இழைகளை வேரிலிருந்து வலுப்படுத்தி, உடைவதைத் தடுக்கிறது.நரை முடி: நரை முடி வருவதை தாமதப்படுத்த உதவுகிறது.
வீட்டிலேயே கருஞ்சீரக எண்ணெய் தயாரிக்கும் முறை:
தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் – 100 மிலி, கருஞ்சீரகம் – 1 முதல் 2 ஸ்பூன், வெந்தயம் – 1 ஸ்பூன் (விருப்பப்பட்டால்)
செய்முறை: கருஞ்சீரகத்தை மிக்சியில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.ஒரு இரும்பு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி, மிதமான தீயில் சூடாக்கவும். அரைத்த கருஞ்சீரக பொடியை எண்ணெயில் சேர்த்து, கலவை கருமை நிறமாக மாறும் வரை சூடுபடுத்தவும். எண்ணெய் சூடு ஆறியதும், அதை வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கவும். பயன்படுத்தும் முறை: இந்த எண்ணெயை உச்சந்தலையில் படும்படி தேய்த்து, 10-15 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யவும். ஒரு மணிநேரம் கழித்து, வீரியம் குறைந்த ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசவும். வாரம் 2-3 முறை இதைப் பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.மேலும், கருஞ்சீரக எண்ணெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் எடையைக் குறைக்கவும், தசை மற்றும் மூட்டு வலிகளைக் குறைக்கவும் உதவுகிறது.
கருஞ்சீரக எண்ணெயின் முக்கிய பயன்கள்:
சரும ஆரோக்கியம்: கருஞ்சீரக எண்ணெய் எக்ஸிமா (eczema), சொரியாசிஸ், முகப்பரு மற்றும் தோல் தடிப்புகள் போன்ற பல தோல் பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்தில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கின்றன.
தொகுப்பு:- தவநிதி
