×

பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து ‘சிஎன்ஜி’ காஸ் 2 நாளில் ரூ. 3 உயர்வு

புதுடெல்லி: அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வை சந்தித்தது. டெல்லியில் பெட்ரோல் 94.77 ரூபாயிலிருந்து 97.77 ரூபாயாகவும், டீசல் 87.67 ரூபாயிலிருந்து 90.67 ரூபாயாகவும் உயர்ந்தது. இதனை நியாயப்படுத்தி பேசிய ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, ‘உலக நாடுகளில் பெட்ரோல் விலை 20 முதல் 100 சதவீதம் வரை உயர்ந்தபோதும், பிரதமர் மோடியின் சிறப்பான தலைமையால் இந்தியாவில் பெட்ரோல் 3.2 சதவீதம் மற்றும் டீசல் 3.4 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

இந்த சூழலில், கடந்த 15ம் தேதி சிஎன்ஜி (இயற்கை எரிவாயு) காஸ் விலை கிலோவுக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கிலோவுக்கு 1 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய விலை உயர்வால், டெல்லியில் ஒரு கிலோ சிஎன்ஜி 80.09 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நொய்டா மற்றும் காசியாபாத் பகுதிகளில் இதன் விலை கிலோவுக்கு 88.70 ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் சிஎன்ஜி விலை ஒட்டுமொத்தமாக 3 ரூபாய் உயர்ந்துள்ளது.

Tags : New Delhi ,US ,Israel ,Iran ,Delhi ,
× RELATED பஞ்சாப் அணியை 23 ரன்கள்...