×

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் இது தான்.!! மத்திய அமைச்சர் விளக்கம்

டெல்லி: மேற்காசிய போர் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள காரணத்தால், நம் நாட்டில் எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கம் அளித்து உள்ளார்.

ஒருபக்கம் பலவாரங்களாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், மறுபக்கம் பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியை மத்திய அரசு கட்டுக்குள் வைத்து இருந்தது. அதே போல கச்சா எண்ணெய் விலை தொடர்ச்சியாக உயர்ந்த போதும் கூட, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தாமல் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை பல வாரங்களாக தாங்கின. மேற்கு ஆசிய போரால் பல நாடுகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்று போது, அந்த கடினமான சூழலில் கூட இந்தியா தனித்து நின்றது என்றார் கிரண் ரிஜிஜு.

மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் ஏற்பட்ட மோதல்களின் காரணமாக, பிற நாடுகளில் எரிபொருள் விலைகள் 20% முதல் கிட்டத்தட்ட 100% வரை அதிகரித்திருப்பதை சுட்டி காட்டிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்தியாவில் எரிபொருட்களின் விலை அதிகபட்சமாக 3.4% மட்டுமே உயர்ந்திருப்பதாக குறிப்பிட்டார்.

கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலர்களைத் தாண்டி, உலக நாடுகள் நிலையற்ற தன்மையைச் சந்தித்தபோதும், பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து குடிமக்களைப் பாதுகாப்பதற்காக, இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வாரக்கணக்கில் பெரும் இழப்புகளைத் தாங்கிக்கொண்டன. இதுவே பொறுப்புணர்வுடன் கூடிய ஆட்சிமுறை ஆகும். பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா தொடர்ந்து பொருளாதார நிலைத்தன்மையையும் மக்கள் நலனையும் சமநிலையில் பேணி வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Union Minister ,Delhi ,Kiran Rijiju ,
× RELATED பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முதலமைச்சர் விஜய் கண்டனம்!