×

ஆளுநர் மாளிகை நோக்கி ஹேப்பியாக பறந்த விஜய்க்கு ஷாக்..! சட்டென்று அடித்த யூ டர்ன்.. கவர்னர் சந்திக்க மறுப்பு…

சென்னை: விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரவளித்துள்ள நிலையில், ஆளுனரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரலாம் என்று மகிழ்ச்சியுடன் ராஜ்பவன் நோக்கி விரைந்த விஜய் கார் திடீரென யூ டர்ன் போட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆளுநர் மாளிகை நோக்கி சென்று கொண்டிருந்த விஜய் கார், அடையாறு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென ராஜ்பவன் நோக்கி செல்லாமல் யூ டர்ன் அடித்தது. யூடர்ன் அடித்து மீண்டும் பட்டினப்பாக்கம் நோக்கி விஜய் வாகனம் செல்ல காரணம் ஆளுநர் கேரளம் செல்வதே என தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆட்சியமைக்க தேவையான மெஜாரிட்டி கடிதத்துடன் ஆளுநர் மாளிகை புறப்பட்ட விஜய், தேர்தல் முடிவுக்கு பின் 4-வது முறையாக ஆளுநரை சந்திக்க சென்றார். இந்த நிலையில் கேரளம் செல்வதால் ஆளுநர் விஜயை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்ற தகவல் கிடைத்ததை தொடர்ந்து, ஆளுநர் உடனான விஜய் சந்திப்பு ரத்தாகி உள்ளது. ஆளுநர் கேரளா செல்வதால் ஓரிரு நாட்களுக்கு பின்பே விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags : Vijay ,Governor's House ,Chennai ,Liberation Leopards ,Indian Union Muslim League ,Rajbhavan ,
× RELATED 120 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்ததால்...