×

தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்த விசிக… திருமாவிடம் ஆதரவு கடிதம் பெற்ற ஆதவ்

சென்னை: பலமணி நேர இழுபறிக்கு பிறகு தவெக தமிழக்தில் ஆட்சியமைக்க விடுதலை சிறுத்தைகள் ஆதரவு அளித்து உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சந்தித்து தவெக ஆட்சியமைக்க தேவையான ஆதரவு கடிதத்தை ஆதவ் அர்ஜுனா வாங்கி இருக்கிறார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவளித்து உள்ளதன் மூலம் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை விஜய்யின் தவெக கட்சி பெற்றுள்ளது. விசிக ஆதரவளித்து உள்ளதன் மூலம் தவெக தலைவர் விஜய் விரைவில் தமிழக முதல்வர் ஆவார் என்று தெரிகிறது. திருமாவளவன் தங்கி இருந்த நட்சத்திர விடுதிக்கு நேரில் சென்று தவெக ஆட்சியமைக்க தேவையான ஆதரவு கடிதத்தை ஆதவ் அர்ஜுனா பெற்று கொண்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தவெக-விற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

முன்னதாக நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தவெக-விற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்திருந்த நிலையில் தற்போது, விசிக-வும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆதரவு கடிதம் வழங்கி உள்ளார். விசிக-வின் ஆதரவு கடிதத்தை திருமாவளவனிடமிருந்து பெற்றப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜூனா, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கும், என்னுடைய ஆசான் திருமாவளவன் அண்ணனுக்கும் நன்றி..!ஜனநாயகம் காக்கப்படும். மக்களின் ஆதரவோடு எங்களின் தலைவர் விஜய், முதலமைச்சர் ஆவார் என்று பேசினார்.

Tags : Aadav ,Vishka ,Daveka ,Chennai ,Taveka ,Liberation Leopards ,Tamil Nadu ,Adav Arjuna ,Liberation Leopards Party ,Thirumavalavan ,Daweka ,
× RELATED தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜயை...