×

தமிழக முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்?

 

சென்னை: தமிழக முதல்வராக நாளை தவெக தலைவர் விஜய் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டதில், எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. அக்கட்சிக்கு 108 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கிடைத்தது. விஜய் 2 தொகுதியில் வெற்றி பெற்றதால், ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும். இதனால் அக்கட்சியின் பலம் 107 ஆக உள்ளது. திமுக கூட்டணி 75 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றது.

அதில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் அக்கட்சியின் பலம் 112ஆக உயர்ந்தது. தனிபெரும் கட்சியாக தவெக வெற்றிபெற்ற போதிலும் ஆட்சியமைக்க முடியாமல் திணறிவருகிறது. இதனிடையே காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம்,  போன்ற கட்சிகள் ஆதரவு அளித்தன. இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர் உடன் தவெக தலைவர் விஜய் சந்தித்து பேசினார்.

ஆதரவு கடிதத்துடன் சென்று த.வெ.க. தலைவர் விஜய் ஆளுநர் அர்லேகரை சந்தித்தார். இந்நிலையில் தமிழக முதல்வராக நாளை தவெக தலைவர் விஜய் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Vijay ,Tamil Nadu ,Chennai ,Tameka ,
× RELATED தவெக ஆட்சி அமைக்க கிடைத்தது...