- காங்கிரஸ்
- பாகல்கோட்
- தாவணகெரே தெற்கு
- கர்நாடக
- பாஜக
- குஜராத்
- திரிபுரா, நாகாலாந்து
- புது தில்லி
- ஹர்ஷத்பாய் கோவிந்த்பாய் பர்மர்
- சவுகான்
- உம்ரத்
- நாகாலாந்து
- கோரிடாங்…
புதுடெல்லி: நாடு முழுவதும் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் வருமாறு:
குஜராத்: குஜராத் மாநிலம் உம்ரத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பா.ஜ வேட்பாளர் ஹர்சத்பாய் கோவிந்த்பாய் பார்மர் 30,743 ஓட்டு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சவுகானை வீழ்த்தினார்.
நாகாலாந்து: நாகாலாந்து மாநிலம் கோரிடாங் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பா.ஜ வேட்பாளர் தாவ்செயர் இம்சென் 3123 ஓட்டுகள் வித்தியாசத்தில் சுயேட்சை வேட்பாளர் தோஷிகாபாவை வீழ்த்தினார்.
திரிபுரா: திரிபுரா மாநிலம் தர்மாநகர் இடைத்தேர்தலில் பா.ஜ வேட்பாளார் ஜாகர் சக்ரபோர்த்தி 18,290 ஓட்டு வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் அமிதாப் தத்தாவை வீழ்த்தி வெற்றி பெற்றார். கர்நாடகாவில், இடைத்தேர்தல் நடந்த பாகல்கோட்டை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட உமேஷ் மேட்டி 21,866 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தாவணகெரே தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட சமர்த் மல்லிகார்ஜுன் 67,576 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
மகாராஷ்டிராவில், பாராமதி தொகுதி இடைத்தேர்தலில் துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சுனேத்ரா பவார் 2,18,034 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது, கணவரும் துணை முதல்வராக இருந்தவருமான அஜித்பவார் இறந்ததை தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் நடந்தது. முக்கிய கட்சிகள் எதிர்த்து போட்டியிடாத நிலையில், சுனேத்ரா பவார் 2,18,969 வாக்குகள் பெற்றார். ரஹூரி தொகுதியில் பாஜ வேட்பாளர் அக்ஷய் கார்டிலே 1,12,587 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
