×

தட்டாஞ்சாவடியில் வெற்றி பெற்ற ரங்கசாமி…புதுச்சேரியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் தேஜ கூட்டணி

புதுவை: 2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் சூழலில்,புதுவையில் தற்போது முதல்வராக இருக்கும் ரங்கசாமி இரண்டு தொகுதிகளில் களமிறங்கினார். இதில் தட்டாஞ்சாவடி தொகுதியில் 4,441 வாக்குகள் வித்தியசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

30 தொகுதிகள் கொண்ட பாண்டிச்சேரியில், கடந்த ஏப்ரல் 9 அன்று நடைபெற்ற தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் 91.23% வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தற்போதைய நிலவரப்படி புதுவையை ஆளும் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் மீண்டும் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. புதுச்சேரியில் ஆட்சியமைக்க 16 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி பல இடங்களில் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

2026 புதுவை சட்டமன்ற தேர்தலில் இதுவரை வெற்றி பெற்றுள்ள வேட்பாளர்களின் பட்டியல்:

1. தட்டாஞ்சாவடி – ரங்கசாமி (என்.ஆர். காங்கிரஸ்)
2. முத்தியால்பேட்டை – வையாபுரி மணிகண்டன் (என்.ஆர். காங்கிரஸ்)
3. உப்பளம் அன்பழகன் (அதிமுக)
4. ஏனாம் – மல்லாடி கிருஷ்ணா ராவ் (என்.ஆர்.காங்கிரஸ்)
5. ஊசுடு – கார்த்திகேயன் (காங்கிரஸ்)
6. அரியாங்குப்பம் – ஐயப்பன் (என்.ஆர். காங்கிரஸ்)
7. நெல்லித்தோப்பு – கார்த்திகேயன் (திமுக)
8. ஏம்பலம் – மோகன்தாஸ் (என்.ஆர். காங்கிரஸ்)
9. வில்லியனூர் – ரவிக்குமார் (என்.ஆர். காங்கிரஸ்)
10. லாஸ்பேட்டை சிவக்கொழுந்து (என்.ஆர். காங்கிரஸ்)
11. மண்ணாடிப்பட்டு – நமச்சிவாயம் (பாஜக)
12. கதிர்காமம் – அழகு (சுயேட்சை)

 

Tags : Rangasami ,Dattanjavadi ,Teja ,Puducherry ,Puduwa ,Rangasamy ,2026 ,Puducherry Assembly elections ,Pondicherry ,
× RELATED முதல் முறையாக முக்கிய பிரமுகருக்கான...