சென்னை: தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கு மேல் வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். அதிகபட்சமாக வேலூர், திருத்தணியில் தலா 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது.
ஈரோடு 106, கரூர் பரமத்தி 104, தருமபுரி, திருப்பத்தூர், நாகையில் தலா 103, சேலம் 102, நாமக்கல், கடலூர், தஞ்சாவூரில் தலா 101 டிகிரி டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.
புதுச்சேரியில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் காரைக்காலில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாளை முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது.

