×

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் 31 வாரங்களுக்குப் பிறகும் கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் கருத்து

டெல்லி: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 15 வயது சிறுமியின் 31 வார கர்ப்பத்தை கலைக்கக் கோரி பிறப்பிக்கப்பட்ட முந்தைய நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் கடுமையாகச் சாடியுள்ளது. பெண்கள் தங்கள் உடலின் மீதான கட்டுப்பாட்டை நிலைநாட்ட நடத்தும் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையக்கூடிய இந்தத் தருணத்தில், தனிநபர்களின் விருப்பங்களை (குறிப்பாக இந்த வழக்கில் அந்தச் சிறுமி மற்றும் அவளது குடும்பத்தினரின் விருப்பங்களை) அரசு மதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது.

“பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு அந்தச் சிறுமி அனுபவித்த வேதனைக்கு ஈடுசெய்யக்கூடியது எதுவுமே இல்லை,” என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் ஆவேசத்துடன் கூறினார்.

குடிமக்களுக்கு மரியாதை அளியுங்கள். நீதிமன்றத்தின் கர்ப்பக்கலைப்பு உத்தரவை எதிர்த்து கேள்வி எழுப்பும் சட்டரீதியான தகுதி உங்களுக்கு(கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்) இல்லை… பாதிக்கப்பட்ட சிறுமி அல்லது அவளது குடும்பத்தினருக்கு மட்டுமே அந்தத் தகுதி உள்ளது என நீதிபதி கூறினார்.

கர்ப்பத்தின் இந்த நிலையில் அதைக்கலைப்பது சாத்தியமில்லை. அந்தச் சிறுமி குழந்தையைப் பெற்றெடுத்து, அதைத் தத்தெடுப்புக்கு அளிப்பதே அவளுக்கு உள்ள ஒரே வழி என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி வாதிட்டார்.

மருத்துவ ரீதியிலான தரவுகளை பெற்றோரிடம் காட்டுங்கள்; அவர்கள் அந்தக் கருவைச் சுமந்து பெற்றெடுக்க விரும்பினால், அப்படியே ஆகட்டும். ஆனால் தங்கள் குழந்தையின் மனநலம் ஆபத்தில் இருப்பதாக அவர்கள் கருதினால்… அவர்களே ஒரு முடிவை எடுப்பார்கள் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Tags : Supreme Court ,Delhi ,
× RELATED உலகின் மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறிய ஐரோப்பா.!!