×

கேரள மாநிலத்தில் தினமும் 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை மின்வெட்டு அமல்படுத்தப்படும்: மின்வாரியம் அறிவிப்பு

 

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் தினமும் 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை மின்வெட்டு அமல்படுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. எந்தெந்த நேரத்தில் எங்கெங்கு மின்வெட்டு எவ்வளவு நேரம் என்பதை அப்பகுதி மக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மின் பயன்பாட்டை மக்கள் குறைத்துக் கொள்ள கேரள மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கோடையில் மின்தேவை அதிகரித்துள்ளதால் நிலைமையை சமாளிக்க மின்வெட்டை கேரள அரசு அமல்படுத்துகிறது.

மின் நுகர்வு வரலாறு காணாத வகையில் உயர்ந்து, 117 மில்லியன் யூனிட்டுகளைக் கடந்துள்ளது. இது டிரான்ஸ்ஃபார்மர் மற்றும் விநியோகக் கட்டமைப்பில் அதிகப்படியான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது அதிகாரப்பூர்வமான “லோட் ஷெட்டிங்” இல்லை, மாறாக அதிகப்படியான சுமையைக் குறைக்க (Overload) மின் விநியோகத்தில் செய்யப்படும் “தற்காலிக கட்டுப்பாடுகள்” (Load Management) என்று கேரளா மின்சார வாரியம் (KSEB) தெரிவித்துள்ளது.

மக்கள் இரவு 7 மணி முதல் 11 மணி வரை மின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என KSEB கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நிலைமை மே மாதம் வரை தொடர வாய்ப்புள்ளதால், முன் அறிவிப்புடன் கூடிய SMSalerts அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

 

 

Tags : Kerala ,Thiruvananthapuram ,
× RELATED மராட்டிய மாநிலம் புனே ரயில்...