×

எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ் என அறிவிப்பு

 

சென்னை: எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தென்மண்டல டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜன் அறிவித்துள்ளார். எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு ஐ.ஓ.சி. ரூ.50 கோடி வாடகை பாக்கி வைத்துள்ளது. வாடகை பாக்கியை விடுவிக்கக் கோரி எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் அறிவித்தனர். வாடகை பாக்கியை 2 நாட்களில் தருவதாக ஐ.ஓ.சி. நிறுவன அதிகாரிகள் இ மெயில் மூலம் உத்தரவாதம் அளித்தார். ஐ.ஓ.சி. நிர்வாக இயக்குநர் உத்தரவாதம் அளித்ததை அடுத்து எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது.

Tags : LPG ,Chennai ,South Zone Tanker Truck Owners Association ,President ,Sundharraj ,G Gas Tanker Truck Owners ,Oh. C. Paki ,
× RELATED உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க...