×

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்ததன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சில தளர்வுகள் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்ததன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று நிறைவடைந்த நிலையில் திரும்பப் தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் பணப்பட்டுவாடாவை தடுக்க அமைக்கப்பட்ட பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு திரும்பப் பெறப்பட்டது. தேர்தலில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவுக்கான அவசியம் இதுவரை எழவில்லை.

அனைத்து பூத்களிலும் பதிவான வாக்கு விபரங்களை தேர்தல் பார்வையாளர்கள் இன்று சரிபார்ப்பார்கள். இதில் குளறுபடி கண்டறியப்பட்டால் அந்த பூத்தில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்படும். தமிழகத்தில் மொத்தம் 62 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் துணை ராணுவம், போலீசார் இணைந்து 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,Tamil Nadu Assembly elections ,
× RELATED வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக...