- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- 2026 சட்டமன்றத் தேர்தல்
சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தவறாது வாக்களியுங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலிலில் எனது வாக்கினைச் செலுத்திவிட்டேன். தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள். இன்று நீங்கள் அளிக்கப் போவது வாக்கல்ல; தமிழ்நாட்டைக் காக்க நீங்கள் ஏந்தும் கேடயம். உங்கள் வாக்குதான் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்.
ஜனநாயகம் – மதச்சார்பின்மை – மாநில உரிமைகள் – சமத்துவம் – சமூகநீதி ஆகிய அரசியலமைப்பின் உயர்ந்த விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் உங்களின் வாக்கு அமையட்டும்! தமிழ்நாடு வாக்களிக்கும்; தமிழ்நாடு வெல்லும்! வெல்வோம்_ஒன்றாக என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
