லக்னோ: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய லக்னோ அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்நிலையில் ராஜஸ்தான் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும், நான்ட்ரே பர்கர், பிரிஜேஷ் சர்மா, ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
