×

பிரதமர் மோடி திறக்கவிருந்த ராஜஸ்தான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து

 

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் புதிதாக கட்டப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவிருந்த பச்பத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரூ.80,000 கோடியில் அமைக்கப்பட்ட பச்பத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆலையின் சுத்திகரிப்பு பிரிவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எக்ஸ்சேஞ்சர் வெடித்ததே (Exchanger explosion) இதற்குக் காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்தின் போது அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

உடனடியாக 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆலை அருகே வசிக்கும் மக்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இது இந்தியாவின் முதல் கிரீன்ஃபீல்ட் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வளாகம் ஆகும். சுமார் ரூ.79,450 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், ராஜஸ்தானின் பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

நிலைமையைக் கருத்தில் கொண்டு, ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார். இந்த விபத்தால் நாளை நடைபெறவிருந்த தொடக்க விழாவில் ஏதேனும் மாற்றம் இருக்குமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Tags : Rajasthan ,PM Modi ,Jaipur ,Pachapatra ,Modi ,
× RELATED தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பை மீறி...